ரூ.5 கோடியே 40 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்
ரூ.5 கோடியே 40 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் ரூ.5 கோடியே 40 லட்சத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலக இணை இயக்குனர் பூங்கொடி அருமை கண்ணு ஆய்வு செய்தார்.
பூங்கா அமைக்கும் பணி
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட வடபாதி ஆற்றங்கரை தெருவில் ரூ.5 கோடியே 40 லட்சத்தில் கசடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை பணிகள், பூங்கா அமைத்தல், நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஆய்வு
இந்த பணிகளை சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலக இணை இயக்குனர் பூங்கொடி அருமைகண்ணு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தரமானதாகவும், விரைந்தும் முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களை கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன், நகராட்சி பொறியாளர் மனோகரன், பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன், திடக்கழிவு மேலாண்மை குழு தலைவர் ஜனனி மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.