வளர்ச்சிப்பணிகளை செய்வதில் தாமதம்


வளர்ச்சிப்பணிகளை செய்வதில் தாமதம்
x

வளர்ச்சிப்பணிகளை செய்வதில் தாமதம்

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் வளர்ச்சிப்பணிகளை செய்வதில் தாமதம் ஏற்படுவதாக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினார்கள்.

பள்ளிக்கு மின்மோட்டார்

திருப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஊராட்சிஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் சொர்ணாம்பாள் தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையாளர் மீனாட்சி, துணை தலைவர் தேவிஸ்ரீ முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்கள் பகுதி கோரிக்கைகளை தெரிவித்தனர்.

கவுன்சிலர் சங்கீதா சந்திரசேகர்:-

கணக்கம்பாளையம் கிராமத்தில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் ஒன்றிய பொது நிதியில் இருந்து மேல்நிலை தொட்டிகள் கட்டுமான பணிக்கு டெண்டர் விடப்பட்டது. ஆனால் ஒப்பந்ததாரர் இதுவரை பணி மேற்கொள்ளாமல் உள்ளார். இதனால் அந்த டெண்டரை ரத்து செய்து, அதற்கு பதிலாக அங்குள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் உள்ள கிணற்றில் மின்மோட்டார் பொருத்தி குழாய் வசதி அமைத்துக்கொடுக்க வேண்டும்.

சாலைப்பணிகள்

கவுன்சிலர் பாலசுப்பிரமணியம்:-

இடுவாய் திருமூர்த்திநகரில் பொதுக்கழிப்பிடம் கட்டி 3 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. மக்களுக்கு குடிநீர் வினியோகம் சரிவர கிடைப்பதில்லை. குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த வேண்டும்.

கவுன்சிலர் கல்பனா வேலுச்சாமி:-

முதலிபாளையம் நீலிக்காடு தார் ரோடு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 8 மாதமாகியும் இன்னும் பணிகள் முடியவில்லை. ஆதிதிராவிடர் காலனியில் சாலை பணி 2 ஆண்டு ஆகியும் பணிகள் முடியவடையாமல் உள்ளன. அதுபோல் நீலிகாட்டில் கழிப்பிடம் கட்டி 1 ஆண்டுகளாக பணிகள் முடிக்கப்படாமல் கிடக்கிறது. இதுபோல் மானூர், கரியாம்பாளையம் பகுதியில் சாக்கடைகால்வாய் கட்டும் பணி மாதக்கணக்கில் தாமதமாக நடக்கிறது. அதை உடனடியாக விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.



Next Story