ரூ.12 கோடியில் வளர்ச்சி திட்டபணிகள்


ரூ.12 கோடியில் வளர்ச்சி திட்டபணிகள்
x

ரூ.12 கோடியில் வளர்ச்சி திட்டபணிகள்

திருப்பூர்

முத்தூர்

முத்தூர் பகுதிகளில் ரூ.12 கோடியே 14 லட்சத்து 40 ஆயிரத்தில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

வளர்ச்சி திட்ட பணிகள்

முத்தூர் கடைவீதி, பேரூராட்சி அலுவலகம் எதிரில் 2021- 2022-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சத்தில் புதிய ரேஷன், சக்கரபாளையத்தில் ரூ.10 லட்சத்து 90 ஆயிரத்தில் புதிய அங்கன்வாடி மையம்,, நபார்டு உதவி திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 21 லட்சத்தில் முத்தூர்-மேட்டுக்கடை முதல் தொட்டியபாளையம் வட்டாரக்காடு வரை தார்ச்சாலை புதுப்பிக்கும் பணி, முத்தூர் - நத்தக்காடையூர் சாலை நாடார் காலனி முதல் புதுப்பாளையம் சாலை வரை தார்ச்சாலை புதுப்பிக்கும் பணி, மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 59 லட்சத்தில் தொட்டியபாளையம் -குட்டக்காடு முதல் நொய்யல் ஆறு வரை உள்ள மண் சாலையை தார்ச்சாலையாக மாற்றி அமைக்கும் பணி, முத்தூர் -நொய்யல் சாலை முதல் செல்லியாத்தாள் கோவில் வரை உள்ள மண் சாலையை தார்ச்சாலையாக மாற்றி அமைக்கும் பணி, முத்தூர் -ஈரோடு சாலை கே.என் தோட்டம் வீதிகள், முத்தூர் வெள்ளகோவில் சாலை எஸ்.வி.லைன் குறுக்கு வீதி மற்றும் மகாலட்சுமி நகர் குறுக்கு வீதிகளில் தார்ச்சாலை புதுப்பிக்கும் பணி, நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை திட்டத்தின் கீழ் ரூ.8 கோடியே 17 லட்சத்தில் வெள்ளகோவில் உப கோட்டத்திற்குட்பட்ட அரசு சாலைகளை அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணி, ஓடுதளம் மேம்பாடு செய்யும் பணி, சிறு பாலங்கள் கட்டும் பணி, சாலை சந்திப்பு மேம்பாடு செய்யும் பணி மற்றும் குறுக்கு வடிகால் கட்டும் பணி என மொத்தம் ரூ.12 கோடியே 14 லட்சத்து 40 ஆயிரத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் புதிதாக அமைக்கப்பட உள்ளது

இவைகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமை தாங்கினார். தி.மு.க. ஒன்றிய பொறுப்பாளர் கே.சந்திரசேகரன், பேரூராட்சி தலைவர் எஸ்.சுந்தராம்பாள், துணை தலைவர் மு.க.அப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் செண்பகம் பாலு, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் சுந்தரமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் மோகன், செயல் அலுவலர் வே.முருகன் மற்றும் கவுன்சிலர்கள், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், நகர, சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

---

அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்த போது எடுத்த படம்.


Next Story