நேரு பூங்காவில் மேம்பாட்டு பணிகள் மும்முரம்
நேரு பூங்காவில் மேம்பாட்டு பணிகள் மும்முரம் நடந்து வருகிறது.
நீலகிரி
கோத்தகிரி,
கோத்தகிரி நேரு பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள பேரூராட்சி நிர்வாகம் 15-வது நிதிகுழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.55 லட்சம் ஒதுக்கீடு செய்தது. அதன்படி பூங்காவில் சுற்றுச்சுவர் அமைத்தல், பூங்கா நுழைவுவாயிலில் டிக்கெட் கவுண்ட்டர், கடைகள் அமைத்தல், அழகிய நீரூற்று அமைத்தல் உள்ளிட்ட பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்று வருகின்றன. பின்னர் பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வந்தன. தற்போது சுற்றுச்சுவர் கட்டும் பணி, டிக்கெட் கவுண்ட்டர் கட்டும் பணி மற்றும் பழுதடைந்த நடைபாதைகளை புதுப்பிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பூங்காவில் மேம்பாட்டு பணிகள் விரைவில் முடிவடையும் என்று பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story