ரூ.58.13 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்


ரூ.58.13 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்
x

ரூ.58.13 லட்சத்தில் வளர்ச்சி பணிகளை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், தேவாமங்கலம் கிராமத்தில் ரூ.58 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகளை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க. கண்ணன் தொடங்கி வைத்தார். இதில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் 2022-2023 கீழ் ரூ.44 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பில் தேவாமங்கலம் வ.உ.சி.நகர் தெற்கு வயல் மண் சாலையை மெட்டல் சாலையாக தரம் உயர்த்தும் பணியும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2021-2022, 2022-2023 திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் தேவாமங்கலம் வடுகனேரி வாரியில் சிமெண்டு கான்கிரீட் தடுப்பணை அமைக்கும் பணியும் தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கான பூமி பூஜையில் ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) முருகன், ஒன்றிய பொறியாளர் நடராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர் சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் முருகன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுமதி மதியழகன், ஊராட்சி செயலாளர் ராவணன், ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மணிமாறன், ஒன்றிய அவைத் தலைவர் சிவப்பிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story