மல்லாங்கிணறு பேரூராட்சியில் வளர்ச்சி பணிகள்
மல்லாங்கிணறு பேரூராட்சியில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.
மல்லாங்கிணறு பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டார். ஆய்வின் போது பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சேதுராமன், மல்லாங்கிணறு பேரூராட்சி தலைவர் துளசிதாஸ், பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன், இளநிலை பொறியாளர் கணேசன் மற்றும் பலர் உடனிருந்தனா். அதேபோல அருப்புக்கோட்டை அருகே கோபாலபுரம் ஊராட்சியில் விஸ்வேஸ்வரா அரிசி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த அரிசி ஆலையில் அரசு ஒப்பந்தம் மூலம் நெல்லில் இருந்து அரிசி பிரித்தெடுக்கப்பட்டு கூட்டுறவு துறைக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் இந்த அரிசி ஆலையில் அரிசி பிரித்தெடுக்கும் முறைகள் குறித்தும், தரமான முறையில் பணிகள் நடைபெறுகிறதா? என்பது குறித்தும் கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பணியாளர்களின் பாதுகாப்பு முறைகள் குறித்து ஆலை உரிமையாளர் ரவிந்திரனிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது தாசில்தார் அறிவழகன், கூட்டுறவு துறை அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.