பேரணாம்பட்டு ஒன்றியத்தில் ரூ.5½ கோடியில் வளர்ச்சி பணிகள்


பேரணாம்பட்டு ஒன்றியத்தில் ரூ.5½ கோடியில் வளர்ச்சி பணிகள்
x

பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5½ கோடியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்.

வேலூர்

திட்ட இயக்குனர் ஆய்வு

வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி நேற்று பேரணாம்பட்டு ஒன்றியத்தில் ரூ.5½ கோடியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார். அப்போது மேல்பட்டி ஊராட்சியில் முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்கு உணவு தயாரிக்கும் சமையற் கூடம், 2 வகுப்பறை கட்டிடம், சத்துணவு சமையலறை ஆகியவற்றையும், ராஜக்கல் ஊராட்சி ஒட்டர் பாளையம் கிராமத்தில் பள்ளி கட்டிடம், வடமலை கிராமத்தில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார்சாலை அமைக்கும் பணி, கொத்தூர் ஊராட்சியில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் நடைபெறும் பள்ளிக் கட்டிடம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் நடைபெறும் சத்துணவு சமையலறை கட்டிடம், மற்றும் சிமெண்டு சாலை பணி ஆகியவற்றையும் பார்வையிட்டார்.

மின்சாரம், குடிநீர் வசதி

புத்தூர் கிராமத்தில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்படும் பயணிகள் நிழற்கூடம், பாலூர் ஊராட்சியில் எம்.பி. தொகுதி நிதியில் அமைக்கப்படும் பயணிகள் நிழற்கூடம், சின்ன தாமல் செருவு ஊராட்சியில் பள்ளி கட்டிடம், சத்துணவு சமையலறை கட்டிடம், சாலைகளின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.

அப்போது பணிகளை விரைந்து முடிக்கும் படியும், காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் உணவு தயாரிக்கும் சமையலறைகளுக்கு மின்சாரம், குடிநீர் வசதிகள் விரைவாக ஏற்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பேரணாம்பட்டு ஒன்றிய ஆணையாளர்கள் ஹேமலதா, எழிலரசி, ஒன்றிய பொறியாளர் பிரமிளா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், பணி மேற்பார்வையாளர் ஹேமாவதி ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story