ரூ.5½ கோடியில் வளர்ச்சித்திட்டப்பணிகள்


ரூ.5½ கோடியில் வளர்ச்சித்திட்டப்பணிகள்
x

ரூ.5½ கோடியில் வளர்ச்சித்திட்டப்பணிகள்

திருப்பூர்

திருப்பூர்,

மூலனூர், தாராபுரம் பகுதியில் ரூ.5½ கோடியில் வளர்ச்சித்திட்டப்பணிகளை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

வளர்ச்சித்திட்டப்பணிகள்

மூலனூர் ஊராட்சி ஒன்றியம், தாராபுரம் ஊராட்சி ஒன்றியம், கன்னிவாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய வளர்ச்சி திட்டப்பணிகள் தொடக்கவிழா நேற்று காலை நடைபெற்றது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தனர்.

அதன்படி கன்னிவாடி பேரூராட்சி மணலூர் பகுதியில் நபார்டு திட்டத்தில் ரூ.56 லட்சத்தில் ஒரத்துப்பாளையம்-மணலூர் சாலை முதல் வேலங்காடு வழியாக கன்னிமார் கோவில்பாளையம் வரை பழுதடைந்த தார் சாலையை புதுப்பிக்கும் பணி நடைபெற உள்ளது. அதேபோல் எரசப்பாடி பகுதியில் ரூ.2 கோடியே 63 லட்சம் மதிப்பில் கன்னிவாடி-எரசப்பாடி சாலை முதல் நொச்சிவலசார் தோட்டம் வழியாக எரசப்பாடி-மொங்கநல்லாம்பாளையம் செல்லும் மண் சாலையை தார் சாலையாக மேம்படுத்தும் பணி நடக்க உள்ளது. மூலனூர் ஊராட்சி ஒன்றியம் கந்தசாமி பாளையத்தில் ரூ.90 லட்சத்தில் குளம் புனரமைப்பு பணி, வடுகபட்டி பகுதியில் ரூ.43 லட்சத்தில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணி நடை பெற உள்ளது. மூலனூரில் ரூ.43 லட்சத்தில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டிட பணி, தாராபுரம் ஒன்றியம், கொங்கூர் பகுதியில் ரூ.67 லட்சத்தில் இடைச்சியம்மன் குளம் புனரமைப்பு என மொத்தம் ரூ.5 கோடியே 62 லட்சம் மதிப்பில் பணிகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.


Next Story