தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை கூட்டம்


தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை கூட்டம்
x

நெல்லையில் தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவை ஆலோசனை கூட்டம் நெல்லை வண்ணார்பேட்டையில் நடைபெற்றது. இளையசேகரன் மற்றும் எஸ்.ஆர்.பாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில துணை பொதுச் செயலாளர் ஜெகதீஸ் பாண்டியன், இளைஞர் அணி செயலாளர் துரை பழனி, மண்டல செயலாளர்கள் மங்களராஜ் பாண்டியன், மயில் வாகனம் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மாவட்டங்களில் உள்ள பிற பொறுப்புகள் அனைத்துக்கும் நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். ஊர்கள் தோறும் கிளைகள் அமைக்க வேண்டும். தியாகி இம்மானுவேல் சேகரன் குருபூஜை விழாவுக்கு 500 வாகனங்களில் செல்ல வேண்டும். இம்மானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story