தேவேந்திரகுல வேளாளர்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தேவேந்திரகுல வேளாளர்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

கோவில்பட்டியில் தேவேந்திரகுல வேளாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு பட்டியல் வெளியேற்ற இயக்கமும், கோவில்பட்டி வட்டார தேவேந்திர குல வேளாளர் சங்கமும் இணைந்து தேவேந்திரகுல வேளாளர் மக்களை பட்டியல் பிரிவில் இருந்து மாற்ற வலியுறுத்தி நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தேவேந்திரகுல வேளாளர் சங்கத் தலைவர் மாடசாமி, சங்க பொருளாளர் பெரியதுரை உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், பா.ம.க. மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், பாண்டியனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் எஸ்.சீனிநாடார், யோகீஸ்வரர் உறவின்முறைச் சங்க தலைவர் எஸ்.டி.கண்ணன், பா.ஜனதா மாவட்ட பொறுப்பாளர் எல்.அய்யாத்துரை பாண்டியன், நாம் தமிழர் கட்சி பூ.பாண்டி, மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழக தலைவர் பி.அன்புராஜ் மற்றும் பலர் பேசினர். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். கோவில்பட்டி வட்டார நிர்வாகி சுதந்திர ராஜ் நன்றி கூறினார்.


Next Story