தேவி பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


தேவி பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

திருவள்ளூர் மாவட்டம் தேவி பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், மஞ்சங்காரணை ஊராட்சியை சேர்ந்த கூரம்பாக்கம் கிராமத்தில் தேவி பொன்னியம்மன் கோவிலை கிராம மக்கள் கட்டி முடித்தனர். இக்கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த 3-ந் தேதி பந்தகால் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், சிறப்பு ஹோமங்கள் உள்ளிட்டவை நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று காலை புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசம், மூலவர், பரிகாரம் மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதன் பின்னர், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. அதன் பின்னர், பக்தர்களுக்கு தீர்த்தம், பிரசாதம் வழங்கப்பட்டது. மதியம் கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


Next Story