திருமூர்த்திமலைக்குமாட்டு வண்டிகளில் திரண்டு வந்த பக்தர்கள்


திருமூர்த்திமலைக்குமாட்டு வண்டிகளில் திரண்டு வந்த பக்தர்கள்
x

திருமூர்த்திமலைக்குமாட்டு வண்டிகளில் திரண்டு வந்த பக்தர்கள்

திருப்பூர்

உடுமலை

உடுமலையை அடுத்துள்ளது திருமூர்த்திமலை. இங்கு பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இந்த கோவிலில் ஆடி அமாவாசை தினத்தன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆடி அமாவாசை சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்வதற்கு உடுமலை, மடத்துக்குளம் தாலுக்களில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களைச்சேர்ந்தபக்தர்கள் மாட்டுவண்டிகளில் வருவது வழக்கம். அதன்படி இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் நேற்று மாட்டு வண்டிகளில் வரிசையாக அணிவகுத்து திருமூர்த்திமலைக்கு சென்றனர். அதேபோன்று உடுமலை நகர் வழியாக தளி சாலையிலும் அணி, அணியாக மாட்டு வண்டிகளில் திருமூர்த்திமலைக்கு சென்றனர்.


Next Story