பக்தர்கள் பால்குட ஊர்வலம்


பக்தர்கள் பால்குட ஊர்வலம்
x

கீழையூர் மகா மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடங்களை ஊர்வலமாக எடுத்துசென்றனர்.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

கீழையூர் மகாமாரியம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு பால்குட விழா நடந்தது. இதை முன்னிட்டு அருகில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக வந்து கோவிலை அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். அதனைத் தொடர்ந்து 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வழிபட்டனர்.


Next Story