சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 2 நாட்கள் தடை...!


சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 2 நாட்கள் தடை...!
x

சதுரகிரி மலை கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 2 நாட்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

விருதுநகர்,

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 6-ந் தேதி வரை பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைபகுதில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து சதுரகிரி மலை கோவிலுக்கு நானை மற்றும நாளை மறுநாள் பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.


Next Story