மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன்


மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன்
x

மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

புதுக்கோட்டை

விராலிமலை தாலுகா மேப்பூதகுடி கிராமத்தில் வேட்டைகாட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா நடத்துவது என ஊர் பொதுமக்கள் சார்பில் முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 3-ந் தேதியன்று பூச்சொரிதல் விழா நடைபெற்றது. அன்று முதல் காலை மாலை இருவேளைகளிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று மேப்பூதகுடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் மேப்பூதக்குடி சுற்றுவட்டாரத்தில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினருடன் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story