வள்ளிமலை சுப்பிரமணியசாமி ேகாவிலில் பக்தர்கள் காவடி எடுத்து வந்து சாமி தரிசனம்
வள்ளிமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருவலம்
வள்ளிமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஆடிக்கிருத்திகை
வேலூர் மாவட்டம், வள்ளிமலையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு, நேற்று அதிகாலை கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி தங்க கவச சிறப்பு அலங்காரம் செய்து மகா தீப ஆராதனை நடைபெற்றது.
இக்கோவிலுக்கு நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காவடி எடுத்து வந்து 'வள்ளிமலை முருகனுக்கு அரோகரா, வள்ளி மணாளனுக்கு அரோகரா' என்று பக்தி கோஷங்களை எழுப்பியவாறு தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி சாமி தரிசனம் செய்தனர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என்று அனைத்து தரப்பினரும் காவடி எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தது பக்தி பரவசத்தை ஏற்படுத்தியதாக இருந்தது.
அசரீர்மலை
திருவலம் அருகே உள்ள 66 புத்தூர் அசரீர் மலை முருகன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் ஆடிக்கிருத்திகையையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.