வார விடுமுறைையயொட்டி பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்
வார விடுமுறைையயொட்டி நேற்று பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். வார விடுமுறை, மகாளய அமாவாசை என்பதால், பழனியில் சாமி தரிசனம் செய்ய நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக கேரளா மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் மலைக்கோவில், அடிவாரம், பாதவிநாயகர் கோவில், சன்னதிவீதி, திருஆவினன்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கோவிலில் உள்ள தரிசன வழிகள், அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்லும் படிப்பாதை, யானைப்பாதை ஆகியவற்றில் நேற்று பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் மின்இழுவை ரெயில், ரோப்கார் ஆகிய நிலையங்களிலும் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.