பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கிய பக்தர்கள்


பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
x
தினத்தந்தி 12 May 2023 12:30 AM IST (Updated: 12 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

பிள்ளையார்நத்தம் மகா முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கினர்.

திண்டுக்கல்

ஆத்தூர் ஒன்றியம் பிள்ளையார்நத்தத்தில் மகா முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. விழாவையொட்டி அனுமந்தராயன்கோட்டை அருகே உள்ள குடகனாற்றின் கரையில் இருந்து பால்குடங்களை எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பெண்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர். நேற்று முன்தினம் பிள்ளையார் கோவிலில் இருந்து அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். பின்னர். கோவில் முன்பு பக்தி பரவசத்துடன் பக்தர்கள் பூக்குழி இறங்கினர். அதில் பக்தர்களில் பலர் ஒரு கையில் குழந்தையுடனும், ஒரு கையில் அக்னி சட்டியுடனும் பூக்குழி இறங்கியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. 10 அடி நீள அலகு குத்தியபடி பக்தர் ஒருவர் பூக்குழி இறங்கினார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Related Tags :
Next Story