மகா மாரியம்மன் கோவிலுக்கு அலகு குத்தி வந்த பக்தர்கள்
மகா மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் அலகு குத்தி வந்தனர்.
அரியலூர்
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மணக்கரை கிராமம் கிழக்கு தெருவில் உள்ள மகா மாரியம்மன், மதுரை வீரன், கருப்பண்ணசாமி கோவில் பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பக்தர்கள் அலகு குத்தி, காவடி எடுத்து வருவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருச்சி சாலையில் அண்ணா சிலை அருகில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தி, காவடி எடுத்து கடைவீதி, சின்னவளையம் வழியாக மகா மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். இதையடுத்து மகா மாரியம்மன், மதுரை வீரன், கருப்பண்ணசாமி உள்ளிட்ட சாமிகளுக்கு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story