ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்


ராமேசுவரம் கோவிலில் குவிந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 26 Dec 2022 12:15 AM IST (Updated: 26 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

அரையாண்டு தேர்வு விடுமுறையை தொடர்ந்து ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

அரையாண்டு தேர்வு விடுமுறையை தொடர்ந்து ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

குவிந்த பக்தர்கள்

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கடந்த 23-ந் தேதியுடன் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்தது. வருகின்ற 1-ந் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு விடுமுறையை தொடர்ந்து ராமேசுவரம் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக நேற்று காலை அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர்.

கடலில் நீராடிய பக்தர்கள் கோவிலில் உள்ள 22 தீர்த்தக்கிணறுகளிலும் நீண்ட வரிசையில் நின்று நீராடி சென்றனர்.

மேலும் கோவிலில் உள்ள சாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்வதற்காக கோவிலின் சாமி சன்னதி முதல் பிரகாரத்தில் இருந்து மூன்றாம் பிரகாரம் மற்றும் கிழக்கு வாசல் ரதவீதி வரையிலும் நீண்ட வரிசையில் நின்று சாமியை தரிசனம் செய்து சென்றனர்.

பாதுகாப்பு பணி

பக்தர்கள் கூட்டத்தை வரிசையாக ஒழுங்குபடுத்தி கோவிலுக்குள்ளே தரிசனத்திற்கு அனுப்பும் பணியில் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்செயன் மேற்பார்வையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை சாலை வளைவு, கம்பிப்பாடு கடற்கரை, வில்லூண்டி தீர்த்தம், ராமர் பாதம், பாம்பன் ரோடு பாலம் உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.


Next Story