பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.11½ லட்சம்


பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.11½ லட்சம்
x

பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.11½ லட்சம்

திருப்பூர்

தளி

உடுமலை மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.11 லட்சத்து 65 ஆயிரத்து 333 ஆகும்.

மாரியம்மன் கோவில்

உடுமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வருகின்ற இந்த கோவிலுக்கு சுற்றுப்புற கிராமங்கள் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் நாள்தோறும் வந்து மாரியம்மனை சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். அவ்வாறு வருகின்ற பக்தர்கள் நேர்த்திக்கடனாக உண்டியல்களில் ரூபாய் நோட்டுகள், சில்லறை காசுகள், தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

இந்த காணிக்கைகள் மூன்று மாத இடைவெளியில் வருடத்திற்கு நான்கு முறை கோவில் நிர்வாகத்தின் சார்பில் எண்ணப்படுகிறது. அந்த வகையில் நேற்று காலை கோவில் வளாகத்தில் உள்ள நான்கு உண்டியல்கள் திறக்கப்பட்டது.அ தில் பக்தர்கள் செலுத்தி இருந்த ரூபாய் நோட்டுகள் மற்றும் காசுகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டது.

ரூ.11½ லட்சம்

அதன்படி ரூபாய் நோட்டு மற்றும் சில்லறை காசுகள் சேர்த்து ரூ. 11 லட்சத்து 65 ஆயிரத்து 333 கிடைத்தது. மேலும் தங்கம் 81 கிராம், வெள்ளி 75 கிராம் காணிக்கையாக கிடைத்தது. திருவிழா முடிவடைந்த பின்பு உண்டியல்கள் திறக்கப்பட்டதால் கூடுதலாக தொகை வசூல் ஆகியுள்ளது. இந்தப் பணியில் செயல் அலுவலர் தீபா தலைமையிலான பணியாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.


Next Story