கோவிலுக்கு பாதை உருவாக்கிய பக்தர்கள்
சாட்டுப்பத்தில் வயல்களுக்கு நடுவில் உள்ள கோவிலுக்கு பக்தர்கள் பாதை அமைத்தனர்
திருநெல்வேலி
அம்பை:
அம்ைப யூனியன் சாட்டுப்பத்து பஞ்சாயத்தில் கருணையாற்று கரையோரம் வயல்களுக்கு நடுவில் வெயிலுமுத்தம்மன் கோவில் உள்ளது. சுயம்பாக தோன்றிய பழமைவாய்ந்த இக்கோவிலுக்கு வயல்களின் நடுவில் குறுகிய வரப்புகள் வழியாகவே செல்ல வேண்டி இருந்தது. இதையடுத்து சாட்டுப்பத்து பஞ்சாயத்து தலைவர் சாரதா சுப்பிரமணியன் ஏற்பாட்டின்பேரில், பக்தர்கள் ஒன்றிணைந்து, கோவிலுக்கு செல்லும் பாதையில் உள்ள வயல்களில் 3 அடி வரப்புடன் மேலும் 5 அடி அகலத்துக்கு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள நிலங்களை வாங்கி மண்சாலை அமைத்துள்ளனர். இதனை தார்சலையாக விரைவில் மாற்றி தர வேண்டும் என்று பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story