பக்தர்கள் பால் குட ஊர்வலம்


பக்தர்கள் பால் குட ஊர்வலம்
x

குறிச்சி முத்து மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால் குட ஊர்வலம் நடந்தது.

தஞ்சாவூர்

திருச்சிற்றம்பலம்:

திருச்சிற்றம்பலம் அருகே உள்ள குறிச்சி கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான காவடி, பால்குடம் ஊர்வலம் நேற்று காலை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து கொண்டு முக்கிய விதிகளின் வழியாக வந்து கோவிலை அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். . தொடர்ந்து இரவு தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். நிறைவு நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு வள்ளி திருமணம் நாடகமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை குறிச்சி கிராம இளைஞர்கள், பொதுமக்கள் செய்துள்ளனர்


Next Story