கோவில்பட்டி கோவில் விழாவில் பக்தர்கள் பால் குடம் ஊர்வலம்


கோவில்பட்டி கோவில் விழாவில் பக்தர்கள் பால் குடம் ஊர்வலம்
x

கோவில்பட்டி கோவில் விழாவில் பக்தர்கள் பால் குடம் ஊர்வலம் நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோடு லெனின் நகர் முத்துமாரியம்மன்- கருப்பசாமி கோவில் கொடை விழா கடந்த 9-ந்தேதி கால்நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழா நாட்களில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அக்கினி சட்டி ஏந்தியும் ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக வந்து, கோவிலுக்கு ெசன்று நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனை தொடர்ந்து அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாரதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


Next Story