கஞ்சி கலயத்துடன் பக்தர்கள் ஊர்வலம்


கஞ்சி கலயத்துடன் பக்தர்கள் ஊர்வலம்
x

ஆடிப்பூர விழாவையொட்டி கஞ்சி கலயத்துடன் பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மதனகோபாலபுரம் ஆதிபராசக்தி கோவில் தெருவில் உள்ள மேல் மருவத்தூர் சுயம்பு ஆதிபராசக்தி சித்தர் வழிபாட்டு மன்றத்தின் 42-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் ஆடிப்பூர விழா கடந்த 11-ந்தேதி கலச விளக்கு வேள்வி பூஜையுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. பின்னர் பெண் பக்தர்கள் அம்மனுக்கு அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்து தரிசனம் செய்தனர்.

இதையடுத்து நேற்று மாலை பெரம்பலூர் மேற்கு வானொலி திடல் அருகே உள்ள அய்யப்பன் சுவாமி கோவிலில் திரளான பெண் பக்தர்கள் கஞ்சி கலயம் எடுத்து ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலம் மதனகோபாலசுவாமி கோவில் வழியாக கடைவீதி வந்து பழைய பஸ் நிலையம், காமராஜர் வளைவு, சங்குபேட்டை வழியாக மதனகோபாலபுரத்தில் உள்ள மன்றத்துக்கு சென்றடைந்தது. பின்னர் அங்கு கஞ்சி வார்த்தல் நடந்தது.


Next Story