டி.கொளத்தூர் எல்லை பிடாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்
டி.கொளத்தூர் எல்லை பிடாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
கள்ளக்குறிச்சி
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.கொளத்தூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற எல்லை பிடாரியம்மன் கோவில் உள்ளது. சித்ரா பவுர்ணமியையொட்டி இந்த கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன்படி, டி.கொளத்தூர், பூசாரிபாளையம், கொண்ட சமுத்திரம், ஒட்டநந்தல், புதுப்பாளையம், வேலியம்பாக்கம், வண்டிப்பாளையம், ஆமூர், பெரியசெவலை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பெண்கள், பால்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
தொடர்ந்து, அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்று, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story