ஆடிக்கிருத்திகையையொட்டி மயில்காவடி எடுத்து முருகன் கோவிலுக்கு பக்தர்கள் ஊர்வலம்
ஆடிக்கிருத்திகையையொட்டி மயில்காவடி எடுத்து முருகன் கோவிலுக்கு பக்தர்கள் ஊர்வலம் சென்றனர்.
திருவண்ணாமலை
வந்தவாசி
ஆடிக்கிருத்திகையையொட்டி மயில்காவடி எடுத்து முருகன் கோவிலுக்கு பக்தர்கள் ஊர்வலம் சென்றனர்.
ஆடிக்கிருத்திகையையொட்டி வந்தவாசி,மாம்பட்டு, கீழ்வில்லிவனம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் முருகன் கோவிலுக்கு காவடி எடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக சென்றனர்.
இந்த காவடி ஊர்வலம் வந்தவாசி ஐந்து கண் பாலம், புதிய பஸ் நிலையம், தேரடி பகுதி, பஜார் சாலை, பழைய பஸ் நிலையம் வழியாக முருகன் கோவிலை நோக்கி சென்றது. இதனையொட்டி திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story