புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்
புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர்
புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த நாட்களில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதன் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று திருப்பத்தூரில் உள்ள பழமை வாய்ந்த கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவில், பேராம்பட்டு மண்குன்றமலை சென்ன கேசவன் பெருமாள் கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் 32 பெருமாள்கோவில்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.
இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர், இதனையொட்டி 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story