ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

ஆயில்ய நட்சத்திரத்தையொட்டி  நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
x

ஆயில்யம் நட்சத்திரத்தையொட்டி நாகர்கோவில் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

ஆயில்யம் நட்சத்திரத்தையொட்டி நாகர்கோவில் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நாகராஜா கோவில்

குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் முக்கியமான ஒன்று நாகர்கோவில் நாகராஜா கோவில் ஆகும். ஞாயிற்றுக்கிழமையன்று நாகராஜரை தரிசனம் செய்தால் சகல செல்வமும் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. அதனால் மற்ற நாட்களை விட ஞாயிற்றுக்கிழமையன்று பொதுமக்கள் கூட்டம் கோவிலில் அதிகமாக இருக்கும்.

அதிலும் நேற்று ஆயில்யம் நட்சத்திரம் மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் ஒன்றாக வந்ததால் நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, மதுரை மற்றும் கேரளா உள்ளிட்ட பிற பகுதிகளில் இருந்தும் நாகராஜா கோவிலுக்கு பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து சாமியை தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் நீண்ட வரிசை

சாமி தரிசனம் செய்ய கோவில் வளாகத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். மேலும் கோவில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பக்தர்கள் பால் ஊற்றியும், மஞ்சள் பொடிதுவியும் வழிபட்டனர். புதுமண தம்பதிகளும் அதிகளவில் கோவிலுக்கு வந்ததை காணமுடிந்தது.

பக்தர்களின் கூட்டத்தை முன்னிட்டு கோவிலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story