பக்தர்கள் பால்குடம், பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
பக்தர்கள் பால்குடம், பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
புதுக்கோட்டை
மணமேல்குடி:
கட்டுமாவடி அழியாமொழி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த மாதம் காப்பு கட்டுதலுடன் வைகாசி திருவிழா தொடங்கியது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது. பக்தர்கள் பால்குடம், காவடி, பன்னீர் காவடி, பறவைக் காவடி, அக்னி காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மது எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணியில் மணமேல்குடி போலீசார் ஈடுபட்டிருந்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கணேசபுரம், செம்பியன்மகாதேவிப்பட்டினம், கட்டுமாவடி மீனவர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story