பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்


பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்
x
தினத்தந்தி 17 July 2023 2:30 AM IST (Updated: 17 July 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

திண்டுக்கல்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். வாரவிடுமுறை, முகூர்த்தம், கிருத்திகை, சஷ்டி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம். அந்த வகையில், நேற்று வாரவிடுமுறை என்பதால் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் இன்று (திங்கட்கிழமை) ஆடி மாதப்பிறப்பு என்பதால் நேற்றே பக்தர்கள் பலர் தங்களது குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்தனர். குறிப்பாக கேரளாவை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.

பழனியில் அதிகாலை முதலே அடிவாரம், கோவில் வெளிப்பிரகாரம், சன்னதி ஆகிய பகுதிகளில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் பொது, கட்டண, கட்டளை தரிசன வழிகளில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். அதேபோல் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்வதற்கான ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய நிலையங்களிலும் கவுன்ட்டரை கடந்தும் பக்தர்கள் வரிசை காணப்பட்டது. அலைமோதிய கூட்டத்தால் சுமார் 1½ மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


Next Story