மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி


மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 18 Aug 2023 12:15 AM IST (Updated: 18 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணியில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

தேசிய குடற்புழு நீக்கம் தினத்தை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை சார்பில் வேளாங்கண்ணியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் புனித ஆரோக்கிய அன்னை தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சுகாதார ஆய்வாளர் மோகன் தலைமை தாங்கினார். இதில் வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் டயானாஷர்மிளா கலந்துகொண்டு மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் மற்றும் சமுதாய சுகாதார செவிலியர் முத்துலட்சுமி ஆகியோர் மாணவர்களுக்கு தேசிய குடற்புழு பாதிப்பு குறித்தும், தன் சுத்தம் சுற்றுப்புற சுகாதாரம், கழிப்பறையை பயன்படுத்துதல் குறித்து விளக்கி பேசினர். முன்னதாக சுகாதார ஆய்வாளர் பிரபாகரன் வரவேற்றார். முடிவில் கிராம சுகாதார செவிலியர் கார்த்திகா நன்றி கூறினார். இதில் மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.


Next Story