சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு
சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்தார்.
பெரம்பலூர்
திருச்சி மத்திய மண்டலத்தில் பணிபுரியும் போலீசாரின் குழந்தைகளின் மேற்படிப்பிற்கு வழிகாட்டும் வகையில் கலந்தாய்வு கூட்டம், திருச்சியில் நடந்தது. இதில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்து கொண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், மணிகண்டன் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசாரான ரமேஷ், பாலமுருகன், இளவரசன், ஜெயலட்சுமி, கார்த்திகேயன் ஆகியோரை பாராட்டி சான்றிதழ் மற்றும் பண வெகுமதியை வழங்கினார். இதில் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.சந்தோஷ்குமார், திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணசுந்தர், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story