சுந்தர வரத பெருமாள் கோவிலில் தன்வந்திரி மகாயாகம்
நல்லூர் சுந்தர வரதபெருமாள் கோவிலில் தன்வந்திரி மகாயாகம் நடந்தது.
சேத்துப்பட்டு
நல்லூர் சுந்தர வரதபெருமாள் கோவிலில் தன்வந்திரி மகாயாகம் நடந்தது.
வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தில் சுந்தரவல்லி தாயார் சமேத சுந்தர வரதபெருமாள்தன்வந்திரி பெருமாள் கருடாழ்வார் அனுமான் ஆகிய சுவாமிகளுக்கு காலையில் திருமஞ்சனம் பால் தயிர் சந்தனம் குங்குமம் மூலம் நடந்தது பின்னர் அலங்காரம் செய்து தன்வந்திரி பெருமாளை யாக குண்டதிற்கு முன்பு வைக்கப்பட்டு இதில் 108 கலசம் வைத்து தன்வந்திரி மகாயாகம் 11.பட்டர்கள் மூலம்யாகம் நடத்தப்பட்டது பின்னர் யாகத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் உள்ள கலசத்தை தலை மேல் சுமந்து கோவிலை சுற்றி வந்து மூலவர் சன்னதியில் உள்ள சுந்தரவல்லி தாயார் சுந்தர வரத பெருமாள்ஆகிய சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது பின்னர் அங்கிருந்து சிறப்பு பூஜை செய்து கூடியிருந்த பக்தர்கள் மீதுபுனித நீர் தெளிக்கப்பட்டதுகோவில் சார்பாக சமபந்தி விருந்து வழங்கப்பட்டது இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.