பொதுத்தேர்வில் தரணி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை


பொதுத்தேர்வில் தரணி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை
x

பொதுத்தேர்வில் தரணி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

தென்காசி

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் அருகே தரணி நகரில் செயல்பட்டு வரும் தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ்-2 தேர்வில் 580 மதிப்பெண்கள் பெற்று சு.முத்துச்செல்வி, 579 மதிப்பெண்கள் பெற்று மு.லாவண்யா, 575 மதிப்பெண்கள் பெற்று ரா.சரண்யா ஆகியோர் சிறப்பிடம் பிடித்தனர். வேதியியல் பாடத்தில் 6 மாணவர்களும், உயிரியல் பாடத்தில் 1 மாணவரும். வணிகவியல் பாடத்தில் 1 மாணவரும் கணினி அறிவியல் பாடத்தில் 1 மாணவரும், கணினி பயன்பாட்டு அறிவியல் பாடத்தில் 1 மாணவரும் 100 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

பிளஸ்-2 தேர்வு எழுதிய 44 மாணவர்களில் 30 மாணவர்கள் 600-க்கு 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 490 மதிப்பெண்கள் பெற்று மாணவி கீர்த்தி, 486 மதிப்பெண்கள் பெற்று மனோஜ் ராஜா, 485 மதிப்பெண்கள் பெற்று கவுதம் ஆகியோர் சிறப்பிடம் பிடித்து பெருமை சேர்த்துள்ளனர்.

சாதனை படைத்த மாணவர்களை தரணி பள்ளிகளின் தலைவர் டாக்டர் பழனி ஜி.பெரியசாமி, தாளாளர் ஆர்.ராமலிங்கம், பள்ளியின் முதல்வர் டாக்டர் ஆர்.குழந்தைசாமி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.


Next Story