மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியருக்கு தர்ம அடி
திருப்பத்தூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியருக்கு தர்ம அடி விழுந்தது.
திருப்பத்தூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியருக்கு தர்ம அடி விழுந்தது.
பாலியல் தொந்தரவு
திருப்பத்தூர் அருகே உள்ள வேங்கடத்தான் வட்டம் பகுதியில் அரசு தொடக்கபள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு மூதல் 5-ம் வகுப்பு வரை 9, மாணவ, மாணவிகள் மட்டுமே படித்து வருகிறார்கள். தலைமை ஆசிரியையாக விஜயா மற்றும் ஆசிரியர் ஆர்.விஜயன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில ஆசிரியர் விஜயன் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல்தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார் உடனடியாக தகவல் அறிந்து அப்பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியையிடம் தகவலை தெரிவித்துள்ளனர். உதவி கல்வி அலுவலர் மாதேஷ்க்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் விசாரணைக்காக நேரில் வந்தார்.
தர்ம அடி
அங்கு மாணவியின் பெற்றோர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் பெருமாள், ஊர் பொதுமக்கள் முன்னிலையில் ஆசிரியர் விஜயனிடம் விசாரணை நடத்தினார். அப்போது ஆசிரியர் விஜயன் நடந்தவற்றை ஒப்புக்கொண்டு எழுதிக் கொடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் ஆசிரியருக்கு தர்மஅடி கொடுத்தனர். உடனே ஆசிரியர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மொத்தம் 9 மாணவ- மாணவிகள் மட்டுமே படிப்பதால் ஆசிரியர் அத்துமீறல்களில் ஈடுபடுவதாகவும், இந்த பள்ளியை வேறு பள்ளியுடன் இணைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். ஆசிரியர் விஜயன் ஏற்கனவே மண்டலவாடி, பொன்னேரி, சின்ன வெப்பம்பட்டு பகுதிகளில் அரசு பள்ளி மாணவிகளுக்கு இதே போன்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டவர். தொடர்ந்து இதே போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.