தர்மராஜ திரவுபதியம்மன் கோவில் திருவிழா
கருவேப்பிலைப்பாளையம் தர்மராஜ திரவுபதியம்மன் கோவில் திருவிழா 5-ந் தேதி தீமிதிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது
திருவெண்ணெய்நல்லூர்
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கருவேப்பிலைப்பாளையம் கிராமத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற தர்மராஜ திரவுபதியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் சாமிக்கு அலங்காரம், சிறப்புபூஜைகள், வாணவேடிக்கை, வீதி உலா, தெருக்கூத்து, இன்னிசை கச்சேரி நடைபெற்று வருகிறது. விழாவின் 12-வது நாளான நேற்று சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து வருகிற 4-ந் தேதி கரகத்திருவிழா, 5-ந் தேதி காலை 8 மணிக்கு அரவாண், வீரபத்திரன் சாமி வீதி உலா, 10 மணிக்கு அரவாண் சிரசு ஏற்றும் நிகழ்ச்சியும், அரவாண் களப்பலியும், 11 மணி முதல் 1 மணி வரை பஞ்சபாண்டவர்கள் கதையை மையமாக கொண்டு மாடு வளைத்தல், கோட்டை இடித்தல் ஆகிய நிகழ்ச்சிகளும், பிற்பகல் 3 மணியளவில் அக்னி வசந்த உற்சவம், கூந்தல் முடித்தல் நிகழ்ச்சிகளும், மாலை 6 மணிக்கு திமீதி திருவிழா நடைபெறுகிறது. இதன் பிறகு மஞ்சள் நீராட்டு விழா, தர்மர் பட்டாபிஷேகம், தெப்பத்திருவிழா, காவடிபூஜை ஆகியவை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக்குழு மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.