ஒன்றிய கவுன்சிலர்கள் தர்ணா


ஒன்றிய கவுன்சிலர்கள் தர்ணா
x

ஒன்றிய கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

சிவகங்கை

காளையார்கோவில்,

காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் 15-வது நிதிக்குழு மானிய நிதி ரூ.1.13 கோடிக்கு 43 பணிகளுக்கும், பொதுநிதி ரூ.83 லட்சத்துக்கு 32 பணிகளுக்கும் டெண்டர் அறிவிக்கப்பட்டது. இதில் ஆளும் கட்சியினர் தலையிடுவதற்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஒன்றியக்குழு தலைவர் ராஜேஸ்வரி கோவிந்தராஜ், துணை தலைவர் ராஜா, தி.மு.க. கவுன்சிலர்கள் உள்பட அனைத்து கவுன்சிலர்களும், ஒன்றிய அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் சத்யன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சமரசம் ஏற்படாததால் டெண்டர் ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story