மத்திய பட்ஜெட்டை கண்டித்து தர்ணா


மத்திய பட்ஜெட்டை கண்டித்து தர்ணா
x

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், மத்திய பட்ஜெட்டை கண்டித்து தர்ணா போராட்டம் நடந்தது.

திண்டுக்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து திண்டுக்கல் நாகல்நகரில் தர்ணா போராட்டம் நடந்தது. இதற்கு மாநகராட்சி கவுன்சிலர் ஜோதிபாசு தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் கணேசன், மாரியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பினர் பாண்டி, நகர செயலாளர் அரபு முகமது, மாவட்டகுழு உறுப்பினர் ஆசாத் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில், மத்திய அரசின் பட்ஜெட்டில் ஏழை மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எந்த பயனும் இல்லை என கோஷங்கள் எழுப்பினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் நகர்குழு உறுப்பினர் கார்த்திக்குமார் நன்றி கூறினார்.


Next Story