ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா
விருத்தாசலத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் 70 வயது அடைந்த அனைத்து ஓய்வூதியர்களுக்கும் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டியும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரியும், சங்கங்களுக்கு இடையே பாரபட்சம் காட்டும் விருத்தாசலம் தாசில்தார் போக்கினை கண்டித்தும் விருத்தாசலம் தாலுகா அலுவலகம் எதிரில் தர்ணா போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் கேசவன் தலைமை தாங்கினார். வட்ட தலைவர்கள் இயேசு அடியான், கணேசன், அண்ணாதுரை, பக்கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் பாண்டுரங்கன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தொடக்கவுரையாற்றி பேசினார். மாநிலத் துணைத் தலைவர் நடராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், மாவட்ட துணைத் தலைவர்கள் முத்துகிருஷ்ணன், ஆதிமூலம், திருநாவுக்கரசு, கணேசன், மாவட்ட இணை செயலாளர் டென்சிங், ராமலிங்கம், சந்திரா, குமாரசாமி ஆகியோர் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன உரையாற்றினர். இதில் ஓய்வூதியர்கள் பலர் கலந்து கொண்டனர்.