இணை இயக்குனர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா


இணை இயக்குனர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா
x

சுகாதாரத்துறை இணை இயக்குனர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டவரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் டவுன் எழில் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சமூக சேவகர் கே. ராஜ்குமார் இவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சுகாதாரத் துறைகள் துணை இயக்குனர் அலுவலகத்திற்கு நேரில் சென்றார்.அப்போது அவர் போலி டாக்டர்கள் மற்றும் ரத்தப் பரிசோதனை நிலையங்கள், தனியார் கிளினிக், மருத்துவ கவுன்சில் கொடுக்கப்பட்ட சான்றிதழ்களை வைக்கப்பட வேண்டும், பெயர் பலகையில் சான்றிதழ் நம்பர் எழுத வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி இணை இயக்குனர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அங்கு இருந்த அலுவலர்கள் இணை இயக்குனர் தற்போது இல்லை எனக் கூறி கோரிக்கைகளை கொடுங்கள் என கேட்டனர். அவர் கொடுக்க மறுத்து இணை இயக்குனரை பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.

பின்னர் அவர் கூறியதாவது;-

திருப்பத்தூர் மாவட்டத்தில் போலி டாக்டர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மருந்து கடைகள் ரத்தப் பரிசோதனை நிலையம், நர்சிங் ஹோம்கள், தனியார் கிளினிக்குகளில், தமிழ்நாடு நர்சிங் ஹோம் மற்றும் மருத்துவமனை வாரியத்திடம் இருந்து பெறப்பட்ட சான்றிதழை வைக்க வேண்டும். இது குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தி குறைதீர்க்கும் கூட்டத்திலும், சுகாதார துறை இணை இயக்குனர், சுகாதாரத் துறை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளுக்கு அனுப்பியும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உடனடியாக போலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பின்னர் அதிகாரிகள் சமரசத்திற்கு பிறகு அங்கிருந்து சென்றார்.


Next Story