போலி பத்திரத்தை ரத்து செய்யக்கோரி தாலுகா அலுவலகம் முன்பு தர்ணா


போலி பத்திரத்தை ரத்து செய்யக்கோரி தாலுகா அலுவலகம் முன்பு தர்ணா
x

நாட்டறம்பள்ளி அருகே போலி பத்திரத்தை ரத்து செய்யக்கோரி தாலுகா அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளியை அடுத்த சொரக்கல்நத்தம் பகுதியைச் சேர்ந்த முனிராஜ் மற்றும் தட்சணாவதி தம்பதிகளுக்கு மணிமேகலை, மகேந்திரன், மஞ்சுளா, மதி ஆகிய 4 பிள்ளைகள் உள்ளனர்.

இந்த தம்பதியினருக்கு சுமார் 10 ஏக்கர் அளவிலான பூர்வீக சொத்து உள்ளது.

முனிராஜ் தம்பதியினரின் கடைசி பிள்ளையான மதியின் மகள் உமாவிற்கு 3.93 சென்ட் அளவிலான நிலத்தை தட்சணாவதி எழுதிக் கொடுத்துள்ளார்.

இதன் காரணமாக தட்சணாவதியின் மூத்த மகளான மணிமேகலை தனக்கு சொந்தம் என கூறி போலி பத்திரம் தயார் செய்து பத்திரப்பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து மதி மற்றும் அவருடைய மகளான உமா ஆகியோர் போலி பத்திரத்தை ரத்து செய்யக்கோரி கலெக்டர், கோட்டாட்சியர், பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் போலி பத்திரத்தை ரத்து செய்யக்கோரி மனு அளித்துள்ளார் மேலும் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.

தற்போது மணிமேகலை 3.93 சென்ட் நிலத்தை தனது பெயருக்கு மாற்றம் செய்து பட்டா வாங்கி உள்ளார்.

அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மற்றும் பட்டாவை ரத்து செய்யக்கோரி இன்று நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகம் முன்பு மதி குடும்பத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதையறிந்து வந்த நாட்டறம்பள்ளி போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மேலும் தாசில்தார் வந்த பின்பு இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story