வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்-25 பேர் கைது


வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்-25 பேர் கைது
x

வீட்டுமனை பட்டா கேட்டு சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

தர்ணா போராட்டம்

சேலம் அருகே பெரிய கொல்லப்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்த சுமார் 25-க்கும் மேற்பட்டோர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள் திராவிடர் புலிகள் இயக்க நிர்வாகி சுப்பிரமணி தலைமையில் கலெக்டர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த டவுன் உதவி கமிஷனர் வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் மோகன்பாபு கண்ணா மற்றும் போலீசார் தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தைநடத்தினர்.

அப்போது, அவர்கள், 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 3 தலைமுறையாக ஒரே இடத்தில் வசித்து வருவதாகவும், தங்களுக்கு அய்யம்பெருமாம்பட்டியில் ஒதுக்கப்பட்ட நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அந்த நிலத்தை மீட்டுத்தரவேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக ஏற்கனவே பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தனர்.

25 பேர் கைது

தொடர்ந்து ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் கேட்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தர்ணாவில் ஈடுபட்ட 17 பெண்கள் உள்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை போலீஸ் வேனில் ஏற்றி தனியார் மண்டபத்தில் தங்கவைத்தனர். பிறகு மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


Next Story