மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டம்
பாளையங்கோட்டையில் மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் பாளையங்கோட்டை தியாகராஜநகர் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. 60 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், இ-டெண்டர் முறையில் அவுட்சோர்சிங் விடுவதை ரத்து செய்ய வேண்டும், ஸ்மார்ட் மீட்டர் புகுத்துவதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. மண்டல செயலாளர் அப்பாத்துரை தலைமை தாங்கினார். மாநில செயலாளர் வண்ணமுத்து தொடங்கி வைத்தார். துணைத்தலைவர்கள் சந்திரன், ஆனந்தம் ஆகியோர் பேசினார்கள். இதில் மாநில துணை பொதுச் செயலாளர் பீர்முகமதுஷா, நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு. செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story