ஒன்றியக்குழு துணைத்தலைவர் தர்ணா போராட்டம்


ஒன்றியக்குழு துணைத்தலைவர் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 17 March 2023 12:15 AM IST (Updated: 17 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் டெண்டர் ஒத்தி வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு துணைத்தலைவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் டெண்டர் ஒத்தி வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

துணைத்தலைவர் தர்ணா

நாகை மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் நடைபெறும் பணிகளுக்கு ரூ.2 கோடியில் நேற்று டெண்டர் நடைபெறுவதாக இருந்தது. இதில் ஒவ்வொரு ஊராட்சிக்கும் ரூ.20 லட்சத்தில் தெருவிளக்கு, மின்சாரம், சுடுகாடு, சாலை பராமரிப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கு டெண்டர் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் அனைத்து ஊராட்சிகளிலும் தலா ரூ.20 லட்சத்தில் சாலை வசதிக்கு மட்டும் டெண்டர் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனை கண்டித்து ஒன்றியக்குழு துணை தலைவர் அ.தி.மு.க.வை சேர்ந்த ஜெகதீஷ், ஒன்றிய அலுவலக வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

டெண்டர் ஒத்தி வைப்பு

ஊராட்சிகளில் குடிநீர் பிரச்சினை உள்ளது. எனவே குடிநீர், மின்சாரம், சுடுகாடு உள்ளிட்ட பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை தார் சாலைகளுக்கு மட்டும் பயன்படுத்தக்கூடாது என்று கூறி டெண்டரை ஒத்தி வைக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட ஜெகதீஷ் தெரிவித்தார்.

இதனையடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் மற்றும் தலைஞாயிறு போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட துணைத்தலைவர் ஜெகதீசிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒன்றிய அலுவலக மேலாளர் மணிமுத்து, டெண்டர் ஒத்தி வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனையடுத்து ஜெகதீஷ் தனது போராட்டத்தை கைவிட்டார்.

பரபரப்பு

ஒன்றியக்குழு துணைத்தலைவர் போராட்டம் காரணமாக நேற்று நடைபெற இருந்த டெண்டர் ஒத்தி வைக்கப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story