சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம்
சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் அன்பு தலைமை தாங்கினார். சத்துணவு பிரிவிற்கு கணினி ஆபரேட்டர் நியமிக்க வேண்டும். எரிவாயு சிலிண்டரை நேரடியாக மையத்திற்கு வழங்க வேண்டும். சத்துணவு திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் போக்கை அரசு கைவிட வேண்டும். சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு சம்பளத்துடன் 12 மாதம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story