ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்


ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
x

ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் ஜெயக்குமார், ராமபத்திரன், கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் நாகராஜன் வரவேற்று பேசினார். இதில் மாநில செயலாளர் சந்திரசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் குணசேகரன், பிரேம்சந்திரன், மாவட்ட செயலாளர் பழனிவேலு உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். மருத்துவ காப்பீட்டுத்தொகை ரூ.350-ல் இருந்து ரூ.497 ஆக உயர்த்தப்பட்டுள்ளதை ரத்து செய்து மீண்டும் ரூ.350 பிடித்தம் செய்ய வேண்டும். கண்புரை அறுவை சிகிச்சைக்கு உயர்த்தப்பட்ட தொகை ரூ.30 ஆயிரத்தை வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வனத்துறை, ஊராட்சி செயலாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும். ரயிலில் மூத்த குடிமக்களுக்கு கட்டணசலுகை அளித்ததை மீண்டும் மத்திய அரசு அளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்தது. முடிவில் மாவட்ட பொருளாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.


Next Story