ஓட்டப்பிடாரத்தில்வருவாய்த்துறை ஊழியர்கள் தர்ணா போராட்டம்
ஓட்டப்பிடாரத்தில்வருவாய்த்துறை ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி
ஓட்டப்பிடாரம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆதிதிராவிட தனி தாசில்தார் மனோஜ் முனியன் சஸ்பெண்டு செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும், அவர் மீது நடவடிக்கை எடுத்த அந்த மாவட்ட கலெக்டரை கண்டித்து ஓட்டப்பிடாரம் வருவாய் துறை ஊழியர்கள் தாலுகா அலுவலகத்தை பூட்டி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வகுமார் தலைமை தாங்கினார். இதில் தலைமையிடத்து மண்டல துணை தாசில்தார் வடிவேல், வட்ட வழங்கல் அலுவலர் கருப்பசாமி, வருவாய் ஆய்வாளர் வசந்தகுமார் உட்பட வருவாய்த்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதனால் தாலுகா அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் அலுவலக பணி நடை பெறததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Related Tags :
Next Story