கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டம்
கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
கயத்தாறு:
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று தர்ணா போராட்டம் நடந்தது.
கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா
கயத்தாறில் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு வட்டார தலைவர் கருப்பசாமி தலைமை தாங்கினார். வட்டாரச் செயலாளர் இசக்கிமுத்து வரவேற்று பேசினார். இதில் வட்டாரத் துணைத் தலைவர் கலைச்செல்வி, வட்டார பொருளாளர் கோபிநாத்மனோகரன், வட்டாரத் துணைச் செயலாளர் பரமசிவன் உட்பட பலரும் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
சிறப்பு பாதுகாப்பு சட்டம்
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக தமிழக அரசு இயற்ற வேண்டும். கணினி, கழிவறைவசதி, மின்சார வசதி, தண்ணீர் வசதியுடன் கூடிய பல்வேறு அடிப்படை வசதிகளுடன் அலுவலக கட்டிடம் கட்ட வேண்டும். அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் புதிய மடிக்கணினி, 5ஜி சிம்முடன் கூடிய கைபேசி, பிரிண்டருடன் அரசு விரைவில் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதில் 42 ஆண்,பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்துக் கொண்டு நேற்று காலை முதல் மாலை வரை தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகள் அடங்கிய மனுவை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம், தலைமை செயலகம், தமிழக முதல்-அமைச்சர், வருவாய் துறை அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பினர்.