சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக டோனி நீடிப்பார்
அடுத்த ஐ.பி.எல். சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக டோனி நீடிப்பார் என அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விசுவநாதன் கூறினார்.
அடுத்த ஐ.பி.எல். சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டனாக டோனி நீடிப்பார் என அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விசுவநாதன் கூறினார்.
வெள்ளி விழா
திருவாரூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேசன் 25-ம் ஆண்டு வெள்ளிவிழா திருவாரூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் பசுபதி வரவேற்றார். செயற்குழு உறுப்பினர் ரமேஷ் மற்றும் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விசுவநாதன், ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர் சாய்கிஷோர், கிரிக்கெட் சங்க மாநில செயலாளர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டு வெள்ளிவிழா ஆண்டையொட்டி நடந்த கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு வழங்கி பாராட்டினர். மேலும் திருவாரூர் கிரிக்கெட் அசோசியேசன் வெள்ளிவிழா மலரை வெளியிட்டனர்.
பேட்டி
பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விசுவநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக வீரர்கள் குறைவாக இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடுகிறார்கள் என்று தற்போது கூற முடியாது. டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இருக்கிறார். விஜய் இருக்கிறார். ஒருநாள் போட்டியில் தினேஷ் கார்த்திக், அஸ்வின் ஆகியோர் விளையாடுகின்றனர். நிறைய தமிழக வீரர்கள் இந்திய அணியில் விளையாடுகின்றனர்.
அடுத்த சீசனிலும் டோனியே கேப்டன்
டி.என்.பி.எல். போட்டியில் விளையாடிய 13 பேர் ஐ.பி.எல். போட்டியில் விளையாடுகின்றனர். அடுத்த ஐ.பி.எல். சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் டோனி விளையாடுவார். அணியின் கேப்டனாகவும் அவர் நீடிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.